FEARLESS JOURNALISM | PEOPLE'S VOICE | NATION'S STRENGTH

Breaking News
Latest news will appear here.
sports

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி: தமிழக வீரர் அபய் சிங்குக்கு முதல்வர் வாழ்த்து

20-வது ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அபய் சிங்குக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

By admin-woj·about 1 month ago·1 min read
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி: தமிழக வீரர் அபய் சிங்குக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அபய் சிங்குக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு

இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில் கூறியிருப்பதாவது: "ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர் அபய் சிங்குக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்."

இளம் வீரர்களுக்கு உத்வேகம்

மேலும் தனது பதிவில், "ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களின் இவ்வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர் எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

Comments

Sign in to join the conversation.

Loading comments…