FEARLESS JOURNALISM | PEOPLE'S VOICE | NATION'S STRENGTH

Breaking News
Latest news will appear here.
crime

காதலிக்க மறுத்ததால் நர்ஸ் படுகொலை: போலீஸ் வலைவீச்சு

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் காதலிக்க மறுத்ததால், 22 வயது செவிலியர் ஜெயஸ்ரீ என்பவரை ரவுடி கலைக்குமார் அரிவாளால் தலையில் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

By admin-woj·about 1 month ago·1 min read
காதலிக்க மறுத்ததால் நர்ஸ் படுகொலை: போலீஸ் வலைவீச்சு

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் கோபாலன் கடை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (22). இவர் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.

இதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கலைக்குமார் என்பவருடன் ஜெயஸ்ரீ சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். பல்வேறு வழக்குகளில் சிக்கிய கலைக்குமார் சிறையில் இருந்தபோது, ஜெயஸ்ரீ வேறொரு நபருடன் திடீரென பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

கொலைக்கான பின்னணி

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, ஜெயஸ்ரீயிடம் பேச கலைக்குமார் பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால், கலைக்குமாருடன் பேசுவதையும் பழகுவதையும் ஜெயஸ்ரீ முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

அதே நேரம் ஜெயஸ்ரீ வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைக்குமார், ஜெயஸ்ரீ முடித்து வீட்டிற்கு வந்தபோது அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

சரமாரி வெட்டு

தகராறின் போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெயஸ்ரீயின் தலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான ரவுடி கலைக்குமாரைப் பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Related Stories

Comments

Sign in to join the conversation.

Loading comments…

புதுச்சேரி வில்லியனூரில் நர்ஸ் படுகொலை: ரவுடி கலைக்குமாருக்கு போலீஸ் வலைவீச்சு