எம்ஜிஆர், ஜெயலலிதா போல திமுகவை தில்லாக எதிர்ப்பது நான் மட்டுமே: தாராபுரம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் அதிரடிப் பேச்சு!
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் P.

தாராபுரம் :
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் P.
சத்தியபாமாவை ஆதரித்து நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.
"ஆட்சியில் செய்த சாதனைகள்":
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், தனது அரசு குறுகிய காலத்தில் நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்டார்:
பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே அமைந்திருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'சிங்கப்பெண்' அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம், பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை அடுத்தடுத்து முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்தார்.
"திமுக - அதிமுக கூட்டணி சதி":
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த விஜய், "பேரறிஞர் அண்ணா வழியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்வதுதான் நமது அரசியல் பாதை. ஆனால், அண்ணாவின் பெயரை மறந்து பினாமியாகச் சுத்துபவர்கள் நம் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.
திமுக தலைவர்கள் என்னை ஒருமையில் பேசுகிறார்கள். அவர்கள் நம்மைத் தரம் தாழ்த்திப் பேசப் பேச, மக்கள் நம்மை உயரத்தில் கொண்டு போய் நிறுத்துவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா போல இப்போதும் துணிச்சலாக திமுகவை எதிர்ப்பது இந்த விஜய் மட்டுமே. குறுக்கு வழியில் நம் ஆட்சையைக் கலைக்க திமுகவும் அதிமுகவும் திட்டம் போடுகின்றன; அது ஒருபோதும் நிறைவேறாது. வேட்பாளர் சத்தியபாமா பதவிக்காக வரவில்லை, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உண்மையான விசுவாசியாக நம்மோடு வந்துள்ளார். எனவே தாராபுரம் மக்கள் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
Related Stories

Politics
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
about 1 month ago

Politics
எஸ்ஐஆர் வேண்டாம் என்பதில் தவெக உறுதியாக இருக்கிறது: அமைச்சர் ராஜ்மோகன்
about 1 month ago

Politics
சென்னையில் Global Capability Centre அமைக்கிறது Starbucks – 800 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள்
about 2 months ago
Comments
Sign in to join the conversation.
Loading comments…


