எஸ்ஐஆர் வேண்டாம் என்பதில் தவெக உறுதியாக இருக்கிறது: அமைச்சர் ராஜ்மோகன்
எஸ்ஐஆர் (SIR) திட்டப் பணிகளைத் தவெக எதிர்ப்பதில் எப்போதும் உறுதியாக இருப்பதாகவும், அதில் எவ்வித அரசியல் சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கட்ரமணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சி.பா. ஆதித்தனார் பெருமைகள்
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், "தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இதழியல் வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். சிந்துபாத் கதை எப்போது வரும் என காத்திருந்து படித்தவன் நான். 1968-ஆம் ஆண்டு இந்தி மொழிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அவர் பேரவையில் ஆற்றிய உரை இன்றும் நெஞ்சில் இருக்கிறது. சட்டப்பேரவையில் திருக்குறளை முதலில் படிக்க வேண்டும் என்ற மரபு ஏற்படுத்தப்பட்டதுடன், தமிழர் நல்வாழ்வுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் பல முயற்சிகளை அவர் எடுத்துள்ளார்" எனப் பெருமிதம் தெரிவித்தார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தவெக நிலைப்பாடு
அதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இது முக்கியமான நாள். கொள்கையில் சமரசம் இன்றி பாடுபட்டவர். கடந்த ஆண்டு இதே நாளில் மறக்க முடியாத மிகப் பெரிய துயரத்தை நாங்கள் எதிர்கொண்டோம். இன்றைய தினம் கரூரில் மாவட்ட செயலாளர் மதி தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
எஸ்ஐஆரைத் (SIR) தெளிவாக எதிர்க்கிறோம் எனப் பதிவு செய்துள்ளோம். எஸ்ஐஆர் பணிகளில் சீர்திருத்தம் வேண்டும் என்று அப்போதே அவர் கூறியிருந்தார். அதே நிலைப்பாட்டில் தான் நாங்கள் இன்றும் இருக்கிறோம். அரசியலுக்காக போராட்டம் நடத்தி, அறிக்கை விடும் கட்சி தவெக அல்ல.
கருத்து சுதந்திரத்திற்கு லட்சுமண கோடு என்று ஒன்று இருக்கிறது. அந்த கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டு உங்களுக்கு என்ன தகவல் வேண்டுமோ அந்த தகவலை நாங்கள் வாங்கித் தருகிறோம். எஸ்ஐஆர் பணிகளின் போது குறிப்பிட்ட வாக்குகள் நீக்கப்பட்டன. எஸ்ஐஆரை நாங்கள் எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தவெக தலைவர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டார். எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் பெருவாரியான வாக்குகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்" எனத் தெரிவித்தார்.
Related Stories

Politics
எம்ஜிஆர், ஜெயலலிதா போல திமுகவை தில்லாக எதிர்ப்பது நான் மட்டுமே: தாராபுரம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் அதிரடிப் பேச்சு!
about 1 month ago

Politics
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
about 1 month ago

Politics
சென்னையில் Global Capability Centre அமைக்கிறது Starbucks – 800 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள்
about 2 months ago
Comments
Sign in to join the conversation.
Loading comments…


