உத்தரப் பிரதேசத்தில் 60 மணி நேர இடைவிடாத கனமழை: 56 பேர் பரிதாப பலி, 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகப் பெய்த 60 மணி நேரத் தொடர் கனமழையால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்; 32-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தவிக்கின்றன.

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதிலும் நிலவி வரும் கடுமையான வளிமண்டலக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கடந்த சனிக்கிழமை முதல் இடைவிடாமல் அதி கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களை உலுக்கியுள்ள இந்த மழைப் பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதுடன், பெரும் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
32-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்பு: மாநிலத்தில் உள்ள சீதாபூர், லக்கிம்பூர் கெரி, பலராம்பூர், கோரக்பூர், அயோத்தி உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை காலை தொடங்கிய கனமழை, நேற்று வரை சுமார் 60 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து இடைவிடாமல் கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
56 பேர் உயிரிழப்பு – சீதாபூரில் அதிக பாதிப்பு: கனமழை, இடி மின்னல் மற்றும் மழை காரணமாகக் வீடுகள் இடிந்து விழுந்த விபத்துகளில் சிக்கி மாநிலம் முழுவதும் இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்திலேயே மிக அதிகபட்சமாகச் சீதாபூர் மாவட்டத்தில் மட்டும் வீடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மண் மற்றும் ஓட்டு வீடுகள் மழையின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் இடிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்: தொடர் மழை காரணமாகப் பல இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளதால் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (NDRF) மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் (SDRF) வெள்ளப் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related Stories

state
வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்: 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு! நிலக்கரி மின் உற்பத்தி அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு
about 1 month ago

state
நேபாளத்தில் தொடர் மழை வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு
about 1 month ago

state
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்
about 1 month ago
Comments
Sign in to join the conversation.
Loading comments…


