FEARLESS JOURNALISM | PEOPLE'S VOICE | NATION'S STRENGTH

Breaking News
Latest news will appear here.
state

குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்

திரைப்படங்களை விட புத்தகங்களை வாசிப்பதே மக்களின் கற்பனை திறனை வளர்க்கும் என்றும், பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுத்து வாசிப்பு பழக்கத்தை விதைக்க வேண்டும் என்றும் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார்.

By admin-woj·about 1 month ago·1 min read
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்

சென்னை: 'எழுத்து' தமிழ் இலக்கிய அமைப்பு, இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 'திருமதி சவுந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு' வழங்கி வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்கான விருதை எழுத்தாளர் செ.ஏக்நாத் ராஜ் எழுதிய 'சடவு' நாவல் பெற்றுள்ளது.

சென்னை நிகழ்வில், செ.ஏக்நாத் ராஜுக்கு நடுவர் குழு சார்பாக ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் விருது பட்டயத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து 'சடவு' நாவலின் முதல் பிரதியை தமிழ்நாடு கவிஞர்கள் பேரவை தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை வெளியிட, கவிஞர் சேது பெற்றுக்கொண்டார்.

வாசிப்பின் சுதந்திரம் மற்றும் சிறப்புகள்

நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: "திரைப்படங்களைப் பார்ப்பதை விட புத்தகங்களை வாசிப்பது மனிதர்களுக்குச் சோர்வில்லாத வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. ஒரு குடும்ப அமைப்புக்குள் தலைமுறை தலைமுறையாக பெண்களின் கற்பனைத் திறனை பன்மடங்கு விரிவடையச் செய்யும்.

ஒரு நாவலை வாசிக்கும் போது அதற்கான காட்சிகளையும், பின்னணி இசையையும் வாசகர்களே தங்கள் கற்பனையில் உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் வாசிப்பில் மட்டுமே உள்ளது. எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிப்பு பழக்கத்தை அவர்களிடம் விதைக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

நாவலின் கருப்பொருள்

இந்நிகழ்வில் பதிப்பக நூலாசிரியர் வரவேற்புரையாற்ற, நடுவர் குழு சார்பாக எழுத்தாளர் என்.ஸ்ரீராம் நூல் அறிமுக உரையும், எழுத்தாளர் அ.வெண்ணிலா நூல் மதிப்பீட்டு உரையும் வழங்கினர்.

இந்த 'சடவு' நாவல், தந்தை சம்பாதித்த சொத்தில் பெண் குழந்தைகளுக்கும் சம பங்கு உண்டு என்பதை நிலைநாட்டுவதற்காக போராடி வெற்றி பெறும் ஒரு பெண்ணின் கதையை மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Comments

Sign in to join the conversation.

Loading comments…