நேபாளத்தில் தொடர் மழை வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாராயணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அபாயக் கட்டத்தைத் தாண்டிப் பாய்கிறது.

காத்மாண்டு: நேபாள நாட்டில் கடந்த வியாழக்கிழமை முதல் கொட்டித் தீர்க்கும் தொடர் மழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மியாங்டி, பாக்லுங் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தால் மீட்புப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆறுகளில் சீறிப்பாயும் பெருவெள்ளம்
திபெத்-நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பனிப்பாறை ஏரி உடைந்ததன் விளைவாக, நேபாளத்தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பாறைகள், மண், சேறு சகதியுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள் என வழியில் இருந்த அனைத்தையும் வாரி சுருட்டி சென்றது.
ரசுவா, நுவாகோட், தாதிங் ஆகிய மாவட்டங்களை இந்த பெருவெள்ளம் புரட்டிப் போட்டது. நேபாளத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டி நீர் பாய்வது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து முடக்கம் மற்றும் மீட்புப் பணிகள்
சித்வான் பகுதிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி காலை நேபாளத்தின் மத்தியப் பகுதியில் பாயும் நாராயணி ஆற்றில் வெள்ள நீர் அபாயக் கட்டத்தைத் தாண்டிப் பாய்கிறது. இதனால் அந்த ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களை நேபாள அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களில் இதுவரை சுமார் 1,451 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 5,000 பேர் மாயமாகி உள்ளனர். கடந்த சனிக்கிழமை வரை சுமார் 13,795 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
Related Stories

state
வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்: 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு! நிலக்கரி மின் உற்பத்தி அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு
about 1 month ago

state
உத்தரப் பிரதேசத்தில் 60 மணி நேர இடைவிடாத கனமழை: 56 பேர் பரிதாப பலி, 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
about 1 month ago

state
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்
about 1 month ago
Comments
Sign in to join the conversation.
Loading comments…


