FEARLESS JOURNALISM | PEOPLE'S VOICE | NATION'S STRENGTH

Breaking News
Latest news will appear here.
Tamilnadu

கரூர் கூட்ட நெரிசல் முதலாண்டு நினைவேந்தல்: பெருந்திரளானோர் கண்ணீர் அஞ்சலி

கரூரில் கடந்த ஆண்டு தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக நிர்வாகிகள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

By admin-woj·about 1 month ago·1 min read
கரூர் கூட்ட நெரிசல் முதலாண்டு நினைவேந்தல்: பெருந்திரளானோர் கண்ணீர் அஞ்சலி

கரூர் கூட்ட நெரிசல் முதலாண்டு நினைவேந்தல்: பெருந்திரளானோர் கண்ணீர் அஞ்சலி

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அறிவிக்கப்பட்டு, அவர்களது வங்கி கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டது. அதன்பின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார்.

வழக்கு விசாரணை மற்றும் அரசு உதவி

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் 31 பேர் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி முதல்வர் விஜய் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி

உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவுநாளை முன்னிட்டு (செப். 27-ஆம் தேதி) தவெக சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில துணைப் பொதுச்செயலாளரும், மாவட்ட அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் மேற்கு மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான வி.பி. மதியழகன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ ம. சத்யா, கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கருப்பு ஆடை, கருப்பு வில்லை அணிந்து, எரியும் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 41 பேரின் புகைப்படங்களுக்குப் பதிலாக, எரியும் மெழுகுவர்த்தி படங்கள் மற்றும் அதன் கீழே உயிரிழந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த பதாகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி, கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

Comments

Sign in to join the conversation.

Loading comments…