மானிய விலை காஸ் சிலிண்டர் பெற பயோமெட்ரிக் கட்டாயம்!
மானிய விலை காஸ் சிலிண்டர் பெற பயோமெட்ரிக் கட்டாயம்!

சென்னை:
மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர் பெறுவதற்கான ஆதார் அடிப்படையிலான மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பை (e-KYC) இதுவரை முடிக்காதவர்கள், உடனடியாக அதை நிறைவு செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இன்று முதல் இந்தச் சரிபார்ப்பு நடைமுறை கட்டாயமாகிறது. இதை முடிக்காதவர்கள் அடுத்தடுத்து காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் காஸ் இணைப்புகளில் ஏற்படும் முறைகேடுகள், போலி இணைப்புகள் மற்றும் ஒரே நபரின் பெயரில் உள்ள பல்வேறு இணைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அரசு வழங்கும் மானியம் உரிய பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் இகே.ஒய்.சி (e-KYC) சரிபார்ப்பு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 90 சதவீத கியாஸ் வாடிக்கையாளர்கள் இகே.ஒய்.சி சரிபார்ப்பை முடித்துள்ளதாகவும், மீதமுள்ள 10 சதவீதம் பேர் இன்னும் முடிக்காமல் இருப்பதாகவும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள் தங்களது கியாஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று, ஆதார் அட்டை நகல், கியாஸ் நுகர்வோர் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்ப்பை முடித்துக் கொள்ளலாம்.
Related Stories

Tamilnadu
தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறைக்கு தேசிய 'SKOCH Silver' விருது!
about 1 month ago

Tamilnadu
நகர்ப்புறப் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நவீனமயமாகும் சென்னை மாநகராட்சி கட்டளை-கட்டுப்பாட்டு மையம்
about 1 month ago

Tamilnadu
மேற்கு வங்க மாநிலத்தில் தவெக முதல் கட்சி அலுவலகம் திறப்பு: மாநிலக் கிளையைத் தொடங்கி வைத்தார் புஸ்ஸி ஆனந்த்
about 1 month ago
Comments
Sign in to join the conversation.
Loading comments…


