FEARLESS JOURNALISM | PEOPLE'S VOICE | NATION'S STRENGTH

Breaking News
Latest news will appear here.
Tamilnadu

நகர்ப்புறப் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நவீனமயமாகும் சென்னை மாநகராட்சி கட்டளை-கட்டுப்பாட்டு மையம்

சென்னையில் மழை, வெள்ளம், போக்குவரத்து நெரிசல் மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட நகர்ப்புறப் பிரச்னைகளைக் ஒரே மையத்தில் கண்காணித்து உடனுக்குடன் தீர்க்க கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் மறுசீரமைக்கப்படுகிறது.

By admin-woj·about 1 month ago·1 min read
நகர்ப்புறப் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நவீனமயமாகும் சென்னை மாநகராட்சி கட்டளை-கட்டுப்பாட்டு மையம்

சென்னை / தூத்துக்குடி: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளம், சாலைகளில் தண்ணீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல் மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புறப் பிரச்னைகளைக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

தற்போது மாநகராட்சி சேவைகள் தொடர்பான தகவல்களை ஒரே மையத்தில் ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் வகையில், செயல்பாட்டில் உள்ள இந்த கட்டளை மையத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தி மறுசீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் விரிவான திட்டமிட்டுள்ளது.

நவீனத் தொழில் நுட்ப மறுசீரமைப்பு: நகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் (Real-Time) துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் புதிய நவீனத் தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காகக் கோடி கணக்கிலான மதிப்பீட்டில் விரிவான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த நவீன மேம்பாட்டின் மூலம் நகரம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள பல்வேறு கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் மாநகராட்சி சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து அவற்றை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்வதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகளும் இமையத்தில் ஏற்படுத்தப்பட உள்ளன.

மழை மற்றும் வெள்ள அபாயத் தடுப்பு நடவடிக்கைகள்: குறிப்பாகப் பருவமழை தீவிரமடையும் மற்றும் பேரிடர் காலங்களில் இமையம் மிக முக்கியப் பங்காற்றும்:

  1. மழைநீர் தேங்கும் பகுதிகள்: நகரில் மழைநீர் தேங்கும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுத்தல்.

  2. வெள்ள அபாய எச்சரிக்கை: வெள்ள அபாயம் ஏற்படும் பகுதிகளை விரைவாகக் கண்டறிந்து, முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது.

  3. உடனடித் தகவல் பரிமாற்றம்: நகர்ப்புறப் பிரச்சனைகள் தொடர்பாகத் தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது.

நகர்ப்புறப் பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த நவீன கட்டளை மையத்தை மாற்றி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு: சென்னை நகரம் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து வரும் நிலையில், நகர்ப்புறச் சேவைகளைத் திறம்படக் கண்காணிப்பதற்கும், மழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் திறம்படச் செயல்படுவதற்கும் இமையம் பயனுள்ளதாக இருக்கும். அவசர காலங்களில் மாநகராட்சியின் பல்வேறு துறைகள், காவல்துறை மற்றும் தொடர்புடைய பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்த மேம்படுத்தப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் பெரும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

Comments

Sign in to join the conversation.

Loading comments…

சென்னை மாநகராட்சி கட்டளை கட்டுப்பாட்டு மையம் நவீனமயம் | பெருவெள்ளக் கண்காணிப்பு