FEARLESS JOURNALISM | PEOPLE'S VOICE | NATION'S STRENGTH

Breaking News
Latest news will appear here.
Tamilnadu

பட்டினப்பாக்கத்தில் ரூ.1200 கோடியில் புதிய தலைமை செயலகம் அமைப்பதை எதிர்த்து வழக்கு: தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்குமுறை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளாமல் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

By admin-woj·about 1 month ago·1 min read
பட்டினப்பாக்கத்தில் ரூ.1200 கோடியில் புதிய தலைமை செயலகம் அமைப்பதை எதிர்த்து வழக்கு: தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு

பட்டினப்பாக்கத்தில் ரூ.1200 கோடியில் புதிய தலைமை செயலகம் அமைப்பதை எதிர்த்து வழக்கு: தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். அடுத்த ஐந்து நாட்களில் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள்

வழக்கறிஞர் விஜய் ஆனந்த் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அடையாறு முகத்துவாரத்துக்கு அருகில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 15 மாடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்த பகுதி நீரில் மூழ்கியது. மேலும், ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இந்த பகுதியில் மீனவர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

கடலோர ஒழுங்குமுறை மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அறிவிப்புக்கு எதிரானது ஆகும்.

சுதந்திரமான ஆய்வு நடத்த கோரிக்கை

இந்த பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்கு மண்டல ஆணைய அதிகாரிகள் சுதந்திரமான ஆய்வை நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த பகுதியில் எந்தவித கட்டுமான அல்லது திட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

Comments

Sign in to join the conversation.

Loading comments…